The Indian Times

திடீரென வீட்டை விட்டு வெளியேறிய வனிதா.. நடந்தது இதுதான்.. வெளியான அதிர்ச்சி தகவல்

வனிதா விஜயகுமார், இந்த பெயரை கடக்காமல் நாம் சமூக வலைத்தளங்களை கடக்கவே முடியாது. அந்த அளவிற்க்கு சமீப காலமாக டிவியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, அடிக்கடி கேட்டு கொண்டு வரும் பெயர்தான் வனிதா. நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா இந்த தம்பதியின் மூத்த மகளான இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். மூன்று திருமணம் முடிந்த நிலையில் யாருடனும் வாழ பிடிக்காமல் அனைவரையும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் ஹரி விஜய்குமாருடன் வாழ்ந்து வரும் நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

Advertisement

இந்த சர்ச்சைகளுக்கு நடுவில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு ஆரம்பம் முதலே சண்டை பிரச்சனை என பிக்பாஸ் வீட்டையே கலவரமாக வைத்து இருந்தார். வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சண்டை மூட்டி வந்தார். எப்பொழுதும் சண்டை சண்டை என்று இருந்த காரணத்தால் கோபமடைந்த மக்கள் ஒரு கட்டத்தில் குறைவான வாக்குகள் அளித்து வெளியேற்றி விட மீண்டும் wild card என்ட்ரி என அவரை உள்ளே கொண்டு வந்தனர் பிக்பாஸ் டீம். ஆனால்அவரது செயல்கள் பிடிக்காமல் மீண்டும் மக்கள் அவரை வெளியேற்றினர்.

Advertisement

இவர் மீண்டும் தற்போது புதிதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஆரம்பித்த 3 வாரங்களாக சண்டை போட்டு கொண்டே வந்தார். நேற்று கூட பிக்பாஸ்ஸிடம் சென்று நான் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி அழுதார். இந்த நிலையில் அவருக்கு மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video…

https://youtu.be/IwBPiCjmjYo

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in