The Indian Times

பாலாவிடம் பேசிகொண்டிருந்த அபி… கடுப்பாகி நிரூப் செய்த வேலையை பாருங்க | BiggBoss Ultimate Feb23 Promo 2

இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். குறிப்பாக தமிழில் வெளியாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு பல ரசிகர்கள் உண்டு. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றில் பிக்பாஸ் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் பிக்பாஸ் வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்துவிட்டது. 5 சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது இந்த 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்று வருகிறது. இது டிவியில் ஒளிபரப்பபடுவதில்லை மாறாக பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 3 மணிநேர எபிசோடாக வாரம்தோறும் ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பாகிறது.

Advertisement

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மிகவும் எதிர் பார்க்கப்பட ஓவியா மற்றும் பரணி கலந்து கொள்ளவில்லை இவர்கள் இருவரும் Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.  Youtube Video embed code credits: Disney + hotstar Tamil

Advertisement

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அபிராமி எதோ பாலா அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு உள்ளார். அப்போது அங்கு வந்த நிரூப் காலையில் இருந்து என்ன கிழிச்சிட்டன்னு இங்க உக்காந்து பேசிட்டு இருக்க என்று கேட்கிறார். அதற்கு நீ என்ன செய்தாய் என்று கோபமாக கேட்டுவிட்டு போகிறார். தனிப்பட்ட வன்மத்தை இங்கு காட்டாதே என்று கூறிவிட்டு ஸ்மோக்கிங் ரூமில் சென்று அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch biggboss promo below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in