The Indian Times

பிக்பாஸ்ஸை தொகுத்து வழங்க உள்ள பிரபல நடிகர்.!! யாருனு தெரியுமா | BiggBoss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட்டையும் கடந்த ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு சற்று ஓய்வு தேவைப்படுவதால் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். பிக்பாஸ்ஸை சுவாரஸ்யமாக நகர்த்தி வந்தார் கமல் என்றால் அது மிகையில்லை. அவருடைய விலகல் பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகுந்த வருத்ததையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. Youtube Video Embed Code Credits: cineulagam 

Advertisement

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில் இனிமேல் பிக்பாஸ்ஸில் நான் இல்லை என்பதை கமல் உறுதி செய்து இருந்தார். ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்த கமல் விக்ரம் படத்தின் வேலைகள் பாதியில் நிற்பதாகவும் அதை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், இது தற்காலிக இடைவெளிதான் மீண்டும் உங்களை சீசன் 6ல் சந்திக்கிறேன் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு அவர் மன்னிப்பும் கோரி இருந்தார். Twitter Source from: Karthik Ravivarma

Advertisement

இதனால் பிக்பாஸ்ஸை யார் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் புது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சிம்பு மீதி வாரங்களை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு நாளை அதிகாரபூர்வ ப்ரோமோவாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதால் சிம்பு எவ்வாறு சூழ்நிலையை கையாளுவார் என்பதை காண பல பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.. Watch the below video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in