பல ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்போது துவங்கப்பட்டு வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த முதல் வாரத்தில் எந்த ஒரு பெரிய சண்டையும் வீட்டில் இல்லை. தாமரை செல்விக்கும் , நமிதாவிற்கும் மன கசப்பு ஏற்பட்டது உண்மை. ஆனால் சிறிது நேரத்திலேயே அது சரியாகி விட்டது. பிறகு நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எதற்காக வெளியேறினார் என்ற காரணம் பலர்குக்கும் தெரியவில்லை. இதை தொடர்ந்து இந்த வரம் முதல் நாளில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது.
அதில் கடைசி வரை விட்டு கொடுக்காமல் விளையாடி , முதல் வார தலைவர் பதவியை ஏற்றார் தாமரை செல்வி. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார நாமினேஷன் நடைபெற்றது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் இசைவாணியை குறிவைத்து உள்ளது போல் காணப்பட்டது. இந்நிலையில் இந்த வார லக்சுரி படஜெட் டாஸ்க் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதில் தங்களில் கதைகளை கூறாமல் இருக்கும் மீதமுள்ளவராகள் அபிநய், நிரூப் ஆகியோர் தான் . அதில் இன்றைய முதல் ப்ரோமோவில் நிரூப் பேசுகிறார். தற்போது மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#BiggBossUNSEEN இரவு 11 மணிக்கு / மறு ஒளிபரப்பு காலை 11 மணிக்கு நம்ம #VijayMusic கில் காணத்தவறாதீர்கள் 📺#BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் pic.twitter.com/V3kl1S0psL
— Vijay Music (@VijayMusicOffl) October 14, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in