தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!!

இந்திய அணியில் தவிர்க்க முடியா வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர் ஜஸ்பிரித் பும்ரா. இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவில் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர் பும்ரா. இவரது பந்து வீச்சின் போது எதிரில் விளையாடுபவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் சற்று தடுமாறுவர். இது வரை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 100க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். வெளி நாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஐ பி ல் தொடரில் நம் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான விராட்கோலி , தோனி ஆகியோரும் பலமுறை பும்ரா பந்து வீச்சில் தங்களின் விக்கெட்களை பறிகொடுத்துள்ளனர்.

தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!! 1

விளம்பரம்

இந்தியணிக்கு பேட்டிங்கில் வலு சேர்ப்பது கோலி என்றால் பௌலிங்கில் வலு சேர்ப்பது பும்ரா தான். ஒருவர் பிரபலமாக இருந்தாலே அவரை பற்றிய வதந்திகள் பல பரவி வருவது சகஜமான ஒன்று. அதேபோல் பும்ராவை சுற்றியும் பல வதந்திகள் பரவி வந்தன. அதில் பும்ரா மற்றும் திரைப்பட நடிகை அனுபாமா பரமேஸ்வரன் காதலிப்பதாக வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வந்தது. இருவரும் ட்விட்டரில் எந்த பதிவு பதிவிட்டாலும் அதை சேர்த்து வைத்து கனெக்ட் செய்து மீம்ஸ் போட்டனர் நெட்டிசன்கள்.

தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!! 2

விளம்பரம்

இதன்காரணமாகவே கடந்த சில போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை என்ற வதந்திகளும் பரவப்பட்டது. அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பும்ரா தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!! 3

விளம்பரம்

சஞ்சனா கணேசன் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். தன்னிடம் பேட்டி எடுத்த தொகுப்பாளரையே பம்பர திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!! 4

விளம்பரம்

எது எப்படியானாலும் அனுபாமா வுடன் சேர்த்து வைத்து பேசப்பட்ட வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்து விட்டார் பும்ரா என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர். கூடிய விரைவில் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசனின் திருமண தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment