நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அடுத்ததாக நானே வருவேன் , தெலுங்கில் சார் படம் வெளியாக உள்ளது.தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாக உள்ளது.தற்போது இவர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது
இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திர்ற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.இந்த பூஜையில் நடிகர்கள் நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.இந்த பூஜைக்கு நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் கெத்தாக வந்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது
Embed video credits : Sathya Jyothi Films
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in