The Indian Times

Carbon – Official Trailer (Tamil) | Vidaarth, Dhanya. B | R. Srinuvasan | Sam CS

தமிழ் சினிமாவில் மைனா என்னும் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பட்டி தொட்டி எல்லாம் அறிமுகமானவர் தான் விதார்த்! இவரை தெரியாதவர் இருக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும்! ஏனெனில் அந்த அளவுக்கு மைனா படம் மூலம் நடிப்பு திறமையால் மக்களுக்கு அறிமுகமான இவருக்கு தொடர்ந்து படங்கள் குவிந்த வண்ணமே இருந்தது!

Advertisement

இந்நிலையில் புகழின் உச்சிக்கு செல்ல செல்ல இவருக்கு நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் இவரை நாடி வந்தது! மேலும் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் தம்பிகளுள் ஒருவராக நடித்திருந்தார்! பின்பு சில காலங்கள் ஹீரோவாக சில படங்க செய்து கொண்டிருந்தார்! இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஜோதிகாவின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்! இது மட்டும் இல்லாமல் இவருக்கென கிடைக்கும் தருணங்களில் படங்கள் நடித்து வந்த இவர் சமீபத்தில் நடித்து வெளியாகவுள்ள படம் தான் கார்பன்!

Advertisement

இந்த படத்தில் இவருக்கு கனவில் காண்பது எல்லாம் நிஜத்தில் நடப்பதை உணர்ந்து சுதாரித்து கொள்ளும் இவர் வாழ்க்கையில் இந்த ஒரு சக்தியை கொண்டு வருங்காலத்தில் இவருக்கு வரும் பிரச்சனைகளை இவர் சரி செய்கிறாரா என்பதை மய்யமாக கொண்டுள்ளது தெரியவருகிறது! இந்நிலையில் இந்த கார்பன் படத்தில் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in