The Indian Times

Single Shot Bottle Fight – Maanaadu | STR | SJ Suryah | Venkat Prabhu | YSR | Suresh Kamatchi

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார்.

Advertisement

கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் பாடல்களை போலவே படமும் அசுர வெற்றியை சிம்புவுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மக்கள் கொடுத்தனர்! பத்து வருட இடைவெளிக்கு பிறகு சிம்புவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி மாநாடு திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே! இந்நிலையில் மாநாடு படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்! அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழ்ந்து ரசியுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in