The Indian Times

“கதை பிடிக்கலன்னா தூங்கிடுவேன்!” ஆணவத்தின் உச்சியில் பேசியதாக அஷ்வினை அசராமல் அடிக்கும் மீம் கிரியேட்டர்ஸ்! CWC Ashwin Troll Viral Video

தமிழ்நாட்டில் உள்ள கன்னிப்பெண்களின் காதலனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின்! ரம்மியமான தோற்றம், அளவான உயரம், அழகான சிரிப்பு, அம்சமான தாடி என பெண்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் அடக்கியுள்ள கோவை தமிழன் தான் அஸ்வின்! ஆனால், இவரை நாளுக்கொரு விதமாக செல்லப்பெயர்கள் வைத்து வித விதமாக ரசிகர் பட்டாளம் இவரை கொண்டாட காரணமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்!

Advertisement

அழகா இருக்கும் ஆண்களை பொதுவாகவே பெண்களுக்கு பிடிக்கும்! அதிலும், அசத்தலாக சமைத்தால் இன்னும் கூடுதல் அழகே! அதுபோல இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைத்து அசத்தியது நாடகங்களில் இவர் நடித்ததை விட பல மடங்கு பெயரையும் புகழையும் தேடி தந்தது! அதே வேகத்தில் பல ஆல்பம் பாடல்களும் நடிக தொடங்கினார்! அந்த பாடல்களும் இவருக்கு பெருவாரியான வெற்றியை தேடி தந்தது! தற்பொழுது குக் வித் கோமாளியின் மற்றுமொரு பிரபலமான புகழோடு இணைந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படமும் நடித்து வருகிறார்!

Advertisement

இதனையடுத்து அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது! இந்நிலையில் தனது ரசிகர்களிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும் பொழுது வளர்ந்து வரும் இயக்குனர்களை இழிவுபடுத்தும் விதமாக ஆணவத்தோடு பேசியதாக நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below!…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in