குக் வித் கோமாளி செட்டை சுற்றிக்காண்பித்த புகழ்.. என்ன பிக் பாஸ் கமல் மாதிரி சுத்தி காமிக்காரு

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

குக் வித் கோமாளி செட்டை சுற்றிக்காண்பித்த புகழ்.. என்ன பிக் பாஸ் கமல் மாதிரி சுத்தி காமிக்காரு 1

விளம்பரம்

பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறார் புகழ்

குக் வித் கோமாளி செட்டை சுற்றிக்காண்பித்த புகழ்.. என்ன பிக் பாஸ் கமல் மாதிரி சுத்தி காமிக்காரு 2

விளம்பரம்

தற்போது இவரை பெரிய ஆளாக தூக்கிவிட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது.வருகிற சனிக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தற்போது புகழ் குக் வித் கோமாளி செட்டினை சுற்றிக்காண்பித்துள்ளார்.இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,நிகழ்ச்சியை காண ஆவலாக இருப்பதாக கூறி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment