The Indian Times

இந்த சுற்றில் இருந்து இன்னைக்கு வெளியே போறது யாருன்னா… ELIMINATION-ஐ அறிவித்த வெங்கடேஷ் பட்.. COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்று கூறினால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டும் தான். இந்த நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. சிறிய விதை போல தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் போல மாறியுள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கும் கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேஷனாக கிஷோர் வெளியேறினார்

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் எலிமினேஷன் சுற்றுக்கு மைம் கோபி மற்றும் விஜே விஷால் ஆகியோர் வந்துள்ளனர்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் கொடுத்துள்ளது.இருவரும் நிகழ்ச்சியில் நன்றாக சமைப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.வெங்கடேஸ் பட் எலிமினேட் ஆகிய போட்டியாளர்களை அறிவிப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in