Playoff-குள் செல்லும் சென்னை – கிடைத்த கடைசி வாய்ப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13வது சீசன் நடந்து வருகிறது. இந்த தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி பரிதாப நிலையில் உள்ளது. இதுவரை நடந்த அணைத்து ஐபிஎல் சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்த தொடரில் இதுவரை நடந்த 11 போட்டிகளில் 3 மட்டுமே வென்று தகுதி பட்டியலில் முன்னேற முடியாமல் திணறி வருகிறது.

Playoff-குள் செல்லும் சென்னை - கிடைத்த கடைசி வாய்ப்பு 1

விளம்பரம்

Credits – CricTracker

நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் படு தோல்வி அடைந்ததால் சிஎஸ்கே அணி அடுத்து சுற்றுக்கு செல்லாது என்று கருதப்பட்டது. இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சாதகமான செய்து ஒன்று வெளியாகியுள்ளது. இன்னும் சிஎஸ்கே அணிக்கு ப்ளேஆஃப்குள் செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

விளம்பரம்

சிஎஸ்கே ப்ளேஆஃப்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதற்கு சிஎஸ்கே மீதமுள்ள மூன்று போட்டிகளில் வென்றாலும் பிளேஆஃப்களில் சிஎஸ்கே தகுதி பெறுவது மற்ற அணிகளின் விளையாட்டை பொறுத்தது.

சூப்பர் கிங்ஸ் முதல் 4 இடங்களைப் பெற வேண்டுமானால் அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவற்றுடன் வெற்றி பெற வேண்டும். மேலும் அதிக ரன்ரேட் எடுக்க வேண்டும்.

விளம்பரம்

இதற்கிடையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள மும்பை மற்றும் டெல்லி அணிகள் வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்க வேண்டும். பெங்களூரு அணி சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் தோற்றிருக்க வேண்டும், ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் லீக் கட்டத்தில் மீதமுள்ள போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல வேண்டும். அப்படி நடந்தால் இந்த மூன்று அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் பட்டியலில் 7, 5, மற்றும் 6 வது இடத்தில் இருப்பர்.

விளம்பரம்

நைட் ரைடர்ஸ் தற்போது தங்கள் 10 புள்ளிகளைக் கொண்டு நான்காவது இடத்தில் உள்ளது . மேலும் இரண்டு புள்ளிகளைப் பெறுவதற்கு, அவர்கள் ராஜஸ்தானை தோற்கடிக்க வேண்டும், ஆனால் DC க்கு எதிராக தோல்வியடைய வேண்டும். அதன்படி நைட் ரைடர்ஸ் 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும்.

இவை அனைத்தும் நடந்தால் சென்னை அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4 இடத்திற்கு முன்னேறி ப்ளேஆஃப்க்கு தகுதி பெரும். இது நடைமுறையில் சாத்தியமற்றது என்று தோன்றினாலும், கணித ரீதியாக சிஎஸ்கே பிளேஆஃப்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment