The Indian Times

நீ எனக்கு COOKஆ? கோமாளியாக மணிமேகலையை தேர்வு செய்த சிவாங்கி… தாங்க முடியாமல் கதறிய மணிமேகலை

தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்து நான்காவது சீசனில் களம் இறங்கி அதிலும் கலக்கி வருகிறது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கு கடந்த மூன்று சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,குரேஷி ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகிறது.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது, ப்ரோமோவில் போட்டியாளராக வந்த சிவாங்கி கோமாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.மேலும் இந்த வாரம் சிவாங்கி தனது கோமாளியாக மணிமேகலையை தேர்வு செய்துள்ளார்.இதனை மணிமேகலை தாங்க முடியாமல் உள்ள நிலையில் மேலும் அவரை கடுப்பேத்துவது போல புகழ் கலாய்ப்பது பார்ப்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால்,நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in