விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்று கூறினால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டும் தான். இந்த நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. சிறிய விதை போல தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் போல மாறியுள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கும் கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேஷனாக கிஷோர் வெளியேறினார்
இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் ஸ்ருஷ்டி புகழை திட்டவே உடனே புகழ் கோமாளிகளை திரட்டிக்கொண்டு குக்குகளுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed video credits : VIJAY TELEVISION