விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகிறது.கடந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார்.
இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் பட் சார் நான் காதில் ஹெட்போன் மாட்டிக்கிறேன் புகழ் நீ சொல்லும் பொருட்களின் பெயரை நான் சரியாக கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார். ஆனால் அதற்கு புகழ் அவரை தம்பி பட்டு என அழைக்கவே அதை சரியாக கண்டுபிடித்து விடுகிறார் வெங்கடேஷ்,இதனால் புகழ் பயத்தின் உச்சத்திற்கே செல்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Embed video credits : VIJAY TELEVISION