The Indian Times

ரஜினி கெட்டப்பில் கொஞ்சி கொஞ்சி பாடலை பாடி வெங்கடேஷ் பட்டை கடுப்பாக்கிய சுனிதா… COOK WITH COMALI

தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்து நான்காவது சீசனில் களம் இறங்கி அதிலும் கலக்கி வருகிறது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கு கடந்த மூன்று சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை ,குரேஷி ,புகழ் ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகிறது.கடந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார்.

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் சுனிதா வீரா பட ரஜினி போல கெட்டப்பில் வந்து அப்படத்தில் இடம்பெற்றுள்ள கொஞ்சி கொஞ்சி அலைகள் பாடலை பாடியுள்ளார்.அதுவும் முழுக்க முழுக்க தவறாக பாடியதால் வெங்கடேஷ் பட் செம்ம கடுப்பாகியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in