விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இங்கு போட்டியாளர்களாக வருபவர்கள் ஆரம்பத்தில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிகழ்ச்சி முடியும் பொழுது நெருங்கிய நண்பர்களாக மாறிவிடுவது இயல்பான ஒன்று.அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சி அனைவரையும் ஒற்றுமையாக்கி புது புது நட்புகளை உருவாக்கி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர்கள் தான் ஸ்ருத்திகா,தர்ஷன்,சந்தோஷ் மற்றும் அம்மு அபிராமி .இவர்கள் தற்போது நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர்.தற்போது இவர்கள் இணைந்து கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
கடற்கரையில் நான்கு பேரும் இணைந்து விளையாடி நடனமாடி மகிழ்ந்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து ஸ்ருதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்த்த குக் வித் கோமாளி ரசிகர்கள் மீண்டும் உங்களையெல்லாம் ஒன்றாக பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நினைவுகூறுவதாகவும் நெகிழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்