The Indian Times

சிவகார்த்திகேயனை நேருக்கு நேர் சந்தித்து கட்டியணைத்த தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.

Advertisement

இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது.

தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது மீண்டும் பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ளார் தனுஷ்

இவர் தற்போது தயாரிப்பாளர் வீட்டு திருமணவிழாவில் கலந்துகொண்டுள்ளார். அங்கு சிவகார்த்திகேயனை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in