The Indian Times

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் மிரட்டும் சொர்க்கவாசல் படத்தின் ட்ரைலர் வெளியாகியது

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படகின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார்.இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி. இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு போனி கபூர் தயாரிப்பில் இவர் இயக்கி நடித்திருக்கும் படம் வீட்ல விசேஷம் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.தொடர்ந்து நடிகராகவும் இயக்குனர் ஆகவும் ஹாட்ரிக் வெற்றிகளை அடித்துள்ளார்.தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.இந்நிலையில் காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில் தற்போது தனது ட்ராக்கை மாற்றி ஆக்ஷன் மற்றும் த்ரில்லரில் களம் இறங்கியுள்ளார்.

Advertisement

அதன்படி இவர் நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் ஆர்ஜே பாலாஜி இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வருகிற 29ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in