The Indian Times

துருவ நட்சத்திரம் பற்றி வெளிவந்த Update – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மின்னலே படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் கௌதம் மேனன். அந்த படத்தை தொடர்ந்து பத்திற்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். ஆனால் சமீபத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்ட படம் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வெளியாகி அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதையடுத்து துருவ நட்சத்திரம் என்ற படம் சியான் விக்ரம் வைத்து எடுத்து வருகிறார்.

Advertisement

இதில் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உள்ளது என்று அரசல் புரசலாக பேசி வந்தனர். அதையெல்லாம் இப்போது முடிவுக்கு கொண்டு வந்து விட்டாராம் கௌதம். இவர் படம் என்றாலே பல நடிகர்கள் வேண்டாம் என்று தெறித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனென்றால் இவர் முழு கதையை வைத்து படம் எடுக்க மாட்டார். படம் எடுக்கும் போது தான் இரண்டாம் பாதி கதையை எழுதுவார்.

Advertisement

இது ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் ரஜினி மற்றும் சூர்யா நிராகரித்த இந்த படத்தை கடைசியில் சியான் விக்ரம் வைத்து எடுத்து வந்தார். படத்தின் கதை இல்லாததால் படம் கிளைமாக்ஸ் காட்சி எடுக்காமல் நின்று விட்டது. இதனால் அந்த படத்தில் நடித்துவரும் அனைத்து நடிகர்களும் வெவ்வேறு படத்திற்கு கால் ஷீட் கொடுத்து விட்டனர். தற்போது கௌதம் மேனன் கதையை தயார் செய்து வைத்து இருக்கிறார். நடிகர்களை படப்பிடிப்புக்கு கூப்பிடும் போது அவரவர் வேறு படங்களில் பிசியாக உள்ளனர்.

இந்த நிலையில் ஒரே வழியாக அனைவரையும் ஒன்று திரட்டி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க கால் ஷீட் வாங்கி உள்ளாராம். இது போக விக்ரம் மற்றும் கௌதம் மேனன் இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன. எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் என்று கௌதம் மேனன் உறுதி அளித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in