The Indian Times

ரீமேக் படத்தில் ஹீரோவாகும் தளபதி விஜய் மகன் சஞ்சய் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் மோஸ்ட் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் இப்போது தன்னுடைய மகன் சஞ்சய்க்கும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்று தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆம் இவர் தனது மகனை தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சஞ்சய் கனடா சென்று சினிமா துறை சார்ந்த படிப்புகள் படித்து இருக்கிறார் என்று அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் தன் தந்தையை வைத்து படம் எடுக்க உள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்போது இவர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். விஜய் தனது மகனை இயக்குனராக பார்ப்பதை விட ஒரு ஹீரோவாக பார்ப்பதை தான் அசை பாடுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இந்த நிலையில் தெலுங்கில் வெளியாகி இருக்கும் மூன்று நாளில் 50 கோடி அளவில் வசூல் செய்த படம் உப்பண்ணா என்ற படத்தின் ரீமேக் கதையில் இவர் நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் புது முக நடிகர் நடிகை இருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி கலக்கி இருப்பார்.

தற்போது அந்த படத்தின் ரீமேக் செய்யும் உரிமையை விஜய் சேதுபதி தான் வாங்கியுள்ளாராம். இதை தொடர்ந்து அந்த படத்தை இவர் தான் தயாரிப்பார் என்று தெரிகிறது. ஆனால் விஜய் தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் சரி அந்த படத்தில் தன் மகனை நடிக்க வைப்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in