The Indian Times

காவ்யா கலெக்டர் ஆகியதை சஸ்பென்ஸாக கூறி சந்தோசப்படுத்திய பார்த்தி…. ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடுத்தனம் செல்கிறார் ப்ரியா. இப்படி காவ்யா பார்த்தி & ஜீவா ப்ரியா தம்பதிகளுக்கு இடையே அடுத்தடுத்து சண்டை நடந்துகொண்டு வந்து இருந்தது,இது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.தற்போது அனைவரும் ஒன்றாக உள்ளனர்.புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்

காவ்யா கலெக்டர் ஆகியுள்ளார் என பார்தி குடும்பத்தில் உள்ள அனைவரையும் கூட்டிவைத்து கூறுகிறார்,இதனை கேட்டு காவ்யா சந்தோஷத்தில் கலங்குகிறார்,உடனே மனைவி கலெக்டர் ஆனதை குடும்பத்துடன் கொண்டாடுகிறார் பார்த்தி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.என்ன எல்லாரும் கலெக்டர் ஆகிடுறாங்க என கலாய்த்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in