The Indian Times

உறியடி விஜயகுமார் நடிக்கும் ELECTION படத்தின் ட்ரைலர் வெளியாகியது

இயக்குனர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் சினிமாவில் வாய்ப்பு தேடியவர் விஜய் குமார்.எங்கு தேடியும் வாய்ப்பு கிடைக்காததால் இவரே தயாரித்து உறியடி என்ற படத்தை இயக்கினார்.இப்படம் திரையரங்குகளில் வெளியாகியது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை, நாட்கள் கடக்கவே இப்படம் இணையத்தில் வெளியாகியது.இணையத்தில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது என்றே சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு விஜய் குமாரும் தனது நன்றிகளை தெரிவித்து இருந்தார்,இப்படத்தை தொடர்ந்து உறியடி 2 ஆம் பாகத்தை இயக்கினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.பின்னர் சூரரை போற்று படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார். அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்த பைட் கிளப் படம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

Advertisement

அதனை தொடர்ந்து தற்போது எலெக்சன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தினை இயக்குனர் தமிழ் இயக்கி உள்ளார். இப்படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Embed Video Credits : DIVO MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in