The Indian Times

Etharkkum Thunindhavan – 1st Single Announcement | Suriya | Sun Pictures | Pandiraj | D.Imman

தமிழ் சினிமாவில் தரமான நடிகர்களுள் தலைசிறந்த ஒருவர் தான் நடிகர் சூர்யா! இவரை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும்! மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான ஒரு முகம் என்றால் அது மிகையாகாது! இவருடைய தந்தை நடிகர் சிவகுமார் அவர்கள் என்பது அனைவருக்கும் அறிந்த ஒரு செய்தியே! சினிமா துறையில் நடிகர் சிவகுமார் நடிப்பை தாண்டிய நல்லொழுக்கத்திற்கு எப்படி பெயர் போனவரோ அதே போல தான் நடிப்பை தாண்டியும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து நடிகர் என்ற பட்டத்தை தாண்டி நல்ல பெயரை மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்துள்ளார்!

Advertisement

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் ஜெய் பீம்! இந்த படம் OTT-ல் வெளியானாலும் இமாலய வெற்றி பெற்று சூர்யாவுக்கு உலகெங்கும் நல்ல பெயர் எடுத்துக்கொடுத்தது! என்னதான் இவருக்கு நல்ல பெயர் இதன்மூலம் கிடைத்தாலும் அதற்கு இணையான விமர்சனமும் வந்து கொண்டு தான் இருக்கிறது! காய்த்த மரமே கல்லடி படும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் நின்று அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்துரைத்ததால் எத்தனை துயர் வந்தாலும் மக்களின் மத்தியில் நாளுக்கு நாள் இவருக்கு செல்வாக்கும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது! இதுவே நிதர்சனமான உண்மை! இவர் நடத்தி வரும் அகரம் நிறுவனம் மூலம் பல லட்ச மாணவ மாணவிகள் கல்வி செல்வதை பெற்று சமூகத்தில் நன்மதிப்பை பெற்று தானும் புகழ் சேர்த்து சூர்யாவுக்கும் புகழ் சேர்த்து வருகின்றனர்!

Advertisement

இன்னும் எத்தனையோ சிறப்பான மனிதாபிமான செயல்கள் சூர்யா சத்தமே இல்லாமல் இன்றும் செய்து கொண்டே தான் இருக்கிறார்! புகழ்ச்சியை விரும்பாமல் தன் கடமையை செய்து வரும் காரணத்தாலேயே என்னவோ சில நேரம் சர்ச்சைக்கும் உள்ளாகிறார்! இந்நிலையில் இவர் நடித்து வெளியாக இருக்கும் அடுத்த திரைப்படம் தான் “எதற்கும் துணிந்தவன்” . அந்த படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வீடியோ தற்பொழுது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in