The Indian Times

Anbarivu Official Trailer | Hip Hop Tamizha | Sathya Jyothi Films | 7th January

தமிழ் சினிமாவில் ஆல்பம் பாடகராக அறிமுகமாகி பின்பு இசைமைப்பாளராக மாறி இறுதியில் ஹீரோவாகவும் மாறி கலக்கி கொண்டு இருப்பவர் தான் ஹிப் ஹாப் ஆதி! இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்! குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவர் புகழ் உச்சத்தில் உள்ளது என்று கூட சொல்லலாம்! இவ்வாறு இருக்கையில் இவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே இவருக்கு ஹிட் படங்களாக மாறியது! பின்பு இவரை ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்டதாக இவர் சொல்லி இவரே இசையும் அமைத்து ஹீரோவாகவும் மாறினார்!

Advertisement

இப்பொழுது அடுக்கடுக்காக படங்களை மக்களுக்கு வழங்கி கொண்டு இருக்கிறார்! இவர் மக்கள் மத்தியில் பேசப்பட முக்கிய காரணம் ஜல்லிக்கட்டு போராட்டம் தான்! அதற்கு முன்பு இவர் ஆல்பம் பாடல்கள் இயக்கிய நிலையில் குறிப்பிட்ட மக்களை தாண்டி இவர் முகம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிய ஆரம்பித்தது! தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் போராடும் யாவரையும் மக்கள் கொண்டாடுவர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை! இவர் நடித்து சமீபத்தில் வெளியான படம் தான் சிவகுமாரின் சபதம்! புல்லிங்கோ பையனை போல நடித்த இவர் படம் திரையரங்குகளில் வெளியானது!

Advertisement

ஆனால் , அடுத்து இவர் நடித்துள்ள படம் தான் “அன்பறிவு”. அண்ணன் தம்பி என இருவேடங்களில் நடித்துள்ளார்! இரு கதாநாயகிகளோடு வலம் வரப்போகும் இவரது படம் OTT தலத்தில் வெளியாக இருக்கிறது! இப்பொழுது அவர் நடித்த படத்தில் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழ்ந்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in