நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் கட்டா குஸ்தி.இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.முன்னணி தெலுங்கு நடிகர் ஆன ரவி தேஜா ஆர் டி டீம் ஒர்க்ஸ் மற்றும் விஷ்ணுவிஷால் இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.பாரம்பரிய சண்டை கலையான கட்டா குஸ்தியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகி உள்ளது.படத்தின் கதையை கீழே விரிவாக காண்போம்
படத்தின் கதை
தமிழகத்தை சேர்ந்த கபடி வீரர் விஷ்ணு விஷால்.இவரை போலவே கேரளாவில் குஸ்தி போடுபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி.இவருக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த விஷ்ணு விஷாலுக்கு சில பொய்களை கூறி திருமணம் செய்து வைக்கின்றனர்.இந்த பொய்களை கணவர் விஷ்ணு விஷாலுக்கு தெரியாமல் ஐஸ்வர்யா லக்ஷ்மி எப்படி சமாளிக்கிறார்?அப்படி என்ன பொய் சொல்கிறார்கள்,விஷ்ணு விஷாலுக்கு பொய் தெரியவருகிறதா? கணவரையும் குடும்பத்தினையும் தாண்டி குஸ்தியில் வெற்றிபெற்றாரா?மனைவியின் மனதினை விஷ்ணு விஷால் புரிந்துகொண்டாரா என இப்படி கேள்விகளுடன் மீதி படத்தின் கதை நகர்கிறது
படத்தின் விமர்சனம்
படத்தில் கபடி வீரர் போல கட்சிதமாக உடல் எடை கொண்டு நடித்து பட்டையை கிளப்பியுள்ளார் விஷ்ணு விஷால்.படத்தில் கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகி ஐஸ்வர்யா அதிரடியில் அசத்தியுள்ளார்.இவர் குஸ்தி போடும் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.விஷ்ணு விஷாலை சண்டை காட்சியில் கொல்ல வரும் எதிரிகளை பந்தாடும் ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு திரையரங்கில் விசில் சத்தம் பறந்துள்ளது.இயக்குனர் செல்லா அய்யாவு இப்படத்தில் கணவன் மனைவிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை சிறப்பாக விளக்கி இருக்கிறார்.தனது திரைக்கதையை கட்சிதமாக வடிவமைத்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி காமெடி பல இடங்களில் ரசிக்க வைத்துள்ளது.மாமாவாக வரும் கருணாஸ் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.படம் தொடங்கும் முன்பே எப்படி முடியும் என்பதை கணிக்க முடிவது படத்திற்கு பெரும் மைனஸ் ஆக அமைந்துள்ளது.ஜஸ்டின் பிரபாகரன் இசை அந்தளவுக்கு எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.இன்னும் பாடல்கள் சூப்பராக செய்திருக்கலாமோ என்ற எண்ணத்தினை பார்வையாளர்களுக்கு உருவாக்குகிறது.மொத்தத்தில் இப்படம் பெண்களுக்கான உரிமையை பேசும் படமாக அமைந்துள்ளது
கட்டா குஸ்தி படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2.5/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in