திருமணத்திற்கு தயார்… மணப்பெண் கோலத்தில் நடிகை ஹன்சிகா…வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .ஆரம்பத்தில் பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு,தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என உடனே ஓகே சொல்லினார்.அதன்படி இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இப்படத்தின் மூலம் பல மக்களுக்கும் பரிட்சயம் ஆகினார் ஹன்சிகா.

கட்டாயம் படிக்கவும்  மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ

திருமணத்திற்கு தயார்... மணப்பெண் கோலத்தில் நடிகை ஹன்சிகா...வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வெற்றியை வீட்டை விட்டு விரட்டும் அபி... போகாத சிம்பா என கதறி அழும் சுடர்.. THENDRAL VANTHU ENNAI THODUM

திருமணத்திற்கு தயார்... மணப்பெண் கோலத்தில் நடிகை ஹன்சிகா...வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில் அதனை உறுதி செய்துள்ளார் ஹன்சிகா. இன்று ஹன்சிகாவுக்கு பாரிஸ் ஈபிள் கோபுரத்தின் முன்பு நிச்சயம் ஆகியுள்ளது.வருங்கால கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் பதிவிட்டு இருந்தார் .தற்போது இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.இவர் மணப்பெண் கோலத்தில் எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சத்யராஜை போலவே அச்சு அசல் இருக்கும் அவர் மகளின் புகைப்படங்கள் இதோ

திருமணத்திற்கு தயார்... மணப்பெண் கோலத்தில் நடிகை ஹன்சிகா...வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment