ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் குழந்தை பிறந்த பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி 2 ஆம் பாகத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாகியதால் அந்த சீரியலை விட்டு ஆல்யா விலகினார்.இந்நிலையில் இரண்டாவது மகன் பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து பழைய ஆல்யா போல மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.ஆனால் தற்போது இந்த முறை சன் டிவியில் இவரது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலுக்கு இனியா என பெயரிடப்பட்டுள்ளது.இந்த சீரியலின் முதல் ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த சீரியல் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.ரசிகர்களும் இதனை காண ஆவலாக உள்ளனர்.
Embed video credits : saregama tv shows tamil