“கலகத்தலைவன்” கலகம் செய்தானா? – திரைவிமர்சனம் (?/5)

விளம்பரம்
விளம்பரம்

நடிகர்,தயாரிப்பாளர் என பல முகங்களை சினிமாவில் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் நடித்து வந்த இவர் தற்போது பிசாசு,நெஞ்சுக்கு நீதி என சீரியசான கதாபாத்திரங்களுக்கு மாறி அதிலும் வெற்றிகண்டுள்ளார் உதயநிதி.இவர் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்,ஸ்ரீகாந்த் தேவா படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தின் விமர்சனத்தினை கீழே காண்போம்

"கலகத்தலைவன்" கலகம் செய்தானா? - திரைவிமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று குறைந்த பெட்ரோல் அதிக மைலேஜ் என்ற கான்செப்டில் புதிய பைக்குகளை அறிமுகம் செய்கிறது.ஆனால் இந்த பைக்கில் இருந்து வெளியாகும் புகையில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது,இதனால் காற்று மாசுபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.இதனை மறைத்து வைத்திருக்கும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் இதுகுறித்து தனக்கு தெரிந்தவர்களிடம் மட்டும் கூறுகிறார்,இருப்பினும் இந்த தகவல் வெளியே கசிந்து இந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.உடனே கார்ப்பரேட் நிறுவனம் யார் இதை செய்தார்,இந்த ரகசியத்தினை வெளிக்கொண்டு வந்தது யார் என கண்டுபிடிக்க ஆரவ்வை களம் இறங்குகிறார்.ஆரவ் தனது விசாரணையை அடிமட்டத்தில் இருந்து கண்டறிந்து வருகிறார்.இந்த ரகசியத்தினை வெளிக்கொண்டு வந்த மர்ம நபர் யார்,இதற்கும் உதயநிதிக்கு என்ன சம்மந்தம்,இதனால் உதயநிதிக்கு என்ன பிரச்சனை வருகிறது என்பதே மீதி படத்தின் கதை ஆகும்

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பசங்க உங்கள மாறியே இருக்கானுங்க விக்கி... நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தைகளை பார்க்க சென்ற நடிகை ராதிகா..

"கலகத்தலைவன்" கலகம் செய்தானா? - திரைவிமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

கதையின் நாயகனாக வரும் உதயநிதி தனது முழு நடிப்பினையும் கொடுத்துள்ளார்,வில்லனாக வரும் ஆரவ் படத்தில் வரும் அனைவரது நடிப்பையும் ஓரம் கட்டியுள்ளார்.படத்தில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை,இதனால் படம் பார்க்கும் ரசிகர்களிடம் இவர் ஏன் படத்தில் தேவையில்லாமல் வருகிறார் என கேள்வி எழுப்புகிறது.வழக்கமாக மகிழ் திருமேனி கதை என்றால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது , ஆனால் இப்படத்தில் கதையில் சுவாரசியம் மற்றும் விறுவிறுப்பும் சற்று அதிகமாகவே குறைவாக உள்ளது,ஏமாற்றம் அளிக்கிறது.முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கலையரசன் ஓகே என சொல்லும் அளவிற்கு நடித்துள்ளார்.படத்தில் சண்டை காட்சிகள் மற்றும் இடைவேளை காட்சிகளை மட்டும் இயக்குனர் அவரது ஸ்டைலில் எடுத்துள்ளார்,மீதமுள்ள அனைத்தையும் பார்க்கும் பொழுது இது மகிழ் திருமேனி கதை என்றே கூறமுடியாது.இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே.ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஏதும் ஒர்கவுட் ஆகவில்லை,ஆனால் பின்னணி இசை படத்திற்கு நல்ல பக்க பலமாக உள்ளது.கதையின் விறுவிறுப்பினை மட்டும் கூட்டியிருந்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும்.

கட்டாயம் படிக்கவும்  கதாநாயகியாக களம் இறங்கிய SINGER RAJALAKSHMI... இத எதிர்பார்க்கவே இல்லையே

கலகத்தலைவன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment