அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு அக்ஷரா ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகிறார்கள்.
அதுவும் ஸ்ருதிகாசன் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அசத்தி வருகிறார்.தற்போது அக்காவும் தங்கையும் சென்னையில் சந்தித்துள்ளனர்.இரவு பத்தலை பத்தலை பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.