என் பையன் ரொம்ப கஷ்ட பட்ருக்கான்..தனுஷை பற்றி பேசும் போது எமோஷனல் ஆன கஸ்தூரி ராஜா | Kasthuri Raja

தமிழ் திரைத்துறையின் முண்ணனி இயக்குனர்களில் ஒருவர்தான் கஸ்தூரி ராஜா. கிராம கதைகளை பிண்ணனியாக கொண்டு கிராமத்தின் மண் வாசனையை திரையின் மூலம் காண்பித்தவர்களில் இவரும் ஒருவர். என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுஙமானார். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மூத்தவர் செல்வராகவன் நடிகர் மற்றும் இயக்குநராக உள்ளார். இளையவர் நாம் அனைவரும் அறிந்த தனுஷ். தனது தனிப்பட்ட உழைப்பு மற்றும் திறமையால் இன்று முண்ணனி நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

என் பையன் ரொம்ப கஷ்ட பட்ருக்கான்..தனுஷை பற்றி பேசும் போது எமோஷனல் ஆன கஸ்தூரி ராஜா | Kasthuri Raja 1

விளம்பரம்

 

நடிகர் தனுஷ் அவர்களின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சில காலமாக சந்தித்து வருகிறார். அவர் காதலித்து கரம்பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் நடுவில் ஏகப்பட்ட பிரச்சினைகள். இருவரும் மனக்கசப்பால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரு குடும்பமும் சமாதானம் பேசியும் பலனில்லை என்று தெரிகிறது. இதனால் இருவரும் தங்களது வேலைகளை பார்க்க சென்றுவிட்டனர். தனுஷ் செல்வராகவன் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ஆல்பம் சாங் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளார். Youtube Video Code Embed Credits: IndiaGlitz

விளம்பரம்

என் பையன் ரொம்ப கஷ்ட பட்ருக்கான்..தனுஷை பற்றி பேசும் போது எமோஷனல் ஆன கஸ்தூரி ராஜா | Kasthuri Raja 2

 

விளம்பரம்

இந்த நிலையில் தங்கர்பச்சான் அவர்களின் மகன் நடிகராக அறிமுகம் ஆகும் விழா ஒன்றில் தனுஷின் அப்பா கலந்து கொண்டார். அங்கே அவர் தனுஷைப் பற்றி ஒரு விஷயத்தை சொன்னார். துள்ளுவதோ இளமை படத்தை யாரும் வாங்க முன்வராததால் ஒரு பெரிய தயாரிப்பாளரை கூட்டிவந்து படத்தை போட்டு காண்பித்தோம், அவர் படத்தைப் பார்த்துவிட்டு உன் பிள்ளை உனக்கு வேண்டுமானல் அழகாக இருக்கலாம், ஆனால் காசு கொடுத்து எவன் இந்த முகத்தை பார்ப்பான் என கூறிவிட்டு சென்றதாகவும், அதே தயாரிப்பாளர் இரண்டு ஆண்டுகள் கழித்து எப்படியாவது தனுஷிடம் கால்சீட் வாங்கி கொடுங்கள் என்று கெஞ்சியதாகவும் கஸ்தூரி ராஜா கூறினார். என்னை விட என் மகன் மிகவும் கஷ்டப்பட்டான் என்றும் அவர் எமோஷனலாக கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment