The Indian Times

நான் போட்ட கோலம் எப்படி இருக்கு.. கோலமிட்டு பொங்கலை கொண்டாடிய கயல் சைத்ரா

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்

இந்நிலையில் கயல் படப்பிடிப்பில் அருமையாக பொங்கலை முன்னிட்டு கோலமிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாகவும் நடிகர்கள் நடிகைகளுடன் கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கயல் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் கயல் கரும்பு சாப்பிடும் அழகை ரசித்து வருகின்றனர்.மேலும் வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in