The Indian Times

நடிகர் வெங்கல்ராவ்க்கு பணம் கொடுத்து உதவிய KPY பாலா.. எவ்வளவு தெரியுமா?

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ். இவரின் காமெடிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் நடிகர் வடிவேலு உடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து உள்ளார். தற்போது சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாததால், மக்களை சிரிக்க வைத்த இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். மேலும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இவர் ஆந்திராவில் தனது வீட்டில் இருந்து வருகிறார்.

Advertisement

இவர் அண்மையில், தனக்கு கை மற்றும் கால் செயல் இழந்து விட்டதாகவும், மேலும் தனக்கு மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் நடிகர்கள் உதவ வேண்டும் என கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ ரசிகர்களிடம் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் பல ரசிகர்களும் அவருக்கு உதவ தயாராக இருந்த நிலையில், நடிகர் சிம்பு முதலில் 1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

Advertisement

அவரை தொடர்ந்து காமெடி நடிகர் பாலா, ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்து உள்ளார். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25ஆயிரம் ரூபாய் கொடுத்தும் உதவி செய்து உள்ளார். இவர்களின் உதவிகளை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in