The Indian Times

காதலனை கரம்பிடித்தார் லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹா

பிரபல பாலிவுட் சினிமா நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே பாலிவுட்டில் உள்ளது.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement

இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றுக்கொடுக்கவில்லை, இதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார்.

இவர் பிரபல ஹிந்தி நடிகர் ஜாஹிர் இக்பாலை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள ஹோட்டலில் பிரமாண்டமாக நடந்தது.

இந்து இஸ்லாமிய திருமண சட்டமின்றி, சிறப்பு சட்டத்தின் மூலம் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இவரின் ரசிகர்கள் அவருக்கு தங்களது திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் திருமணம் முடிந்ததும் மனைவி சோனாக்ஷிக்கு விலையுயர்ந்த காரை அவரின் கணவர் பரிசாக அளித்தும் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in