The Indian Times

யோகி பாபு விதார்த் இணைந்து கலக்கும் குய்கோ படத்தின் ட்ரைலர் வெளியாகியது

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார்.நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.

Advertisement

தற்போது இவர் நடிகர் விதார்த் உடன் இணைந்து குய்க்கோ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் அருள் செழியன் இயக்கியுள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in