The Indian Times

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.

ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

Advertisement

விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை .

தனது நகைச்சுவை திறமையால் போட்டியாளர்களிடம் மட்டும் நற்பெயரை பெறவில்லை மக்களிடமும் தான்.இறுதி வரை வந்து அவர் தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முகேன் வெற்றி பெற்றது,இவரது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தினை அளித்தது என்று தான் கூறவேண்டும்.

அந்த அளவிற்கு இவர் மக்களின் மனதினை கவர்ந்திருந்தார்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்

இவர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in