The Indian Times

வெறித்தனமாக வெளியாகிய லியோ படத்தின் புதிய போஸ்டர்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்நிலையில் தற்போது உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.

Advertisement

விக்ரம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் படத்தினை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.இப்படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஜனவரி 3 முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும் படத்திற்கு லியோ என பெயரிட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,த்ரிஷா,ப்ரியா ஆனந்த்,அர்ஜுன்,மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தின் ஒவ்வொரு மொழி போஸ்டரையும் வெளியிட்டு வருகிறது படக்குழு, இன்று ஹிந்தி போஸ்டரை வெளியிட்டுள்ளது.இதில் சஞ்சய் தத் கழுத்தை இறுக்கப்பிடித்து உள்ளார் விஜய்,இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in