மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்

தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.இவரின் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.தனது இயக்கத்தின் மூலம் பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இவர்.

மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் ஜாதி ரீதியாக படம் எடுக்கிறார் என்று இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டாலும் ஜாதியினால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர் தனது படத்தில் உணர்த்தியிருப்பார்.இதனாலேயே இவரது இயக்கத்திற்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் 2

விளம்பரம்

சினிமா மேல் ஆசை ஆனால் கற்று தர ஆள் இல்லை தேடி அலைந்த மாரி செல்வராஜுக்கு வந்தது அதிர்ஷடம் இயக்குனர் ராம் வடிவில்,மாரியின் ஆர்வத்தை பார்த்து அவரை துணை இயக்குனராக சேர்த்துக்கொண்டார்,தனது எல்லா வித்தைகளையும் தனது சிஷியனுக்கு சொல்லி கொடுத்தார் ராம்.

மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் 3

விளம்பரம்

மாரி செல்வராஜ் கற்றது தமிழ், படத்தில் முதல் முறையாக உதவி இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் தங்க மீன்கள்,தரமணி போன்ற ராமின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் இயக்கத்தை கற்றுக்கொண்டு இவர் உருவாக்கிய படம் தான் பரியேறும் பெருமாள்.

மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் 4

விளம்பரம்

தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய வேடத்தில் பகத் நடிக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கிய நிலையில் இப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் 5

தற்போது இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment