மக்களின் மனதினை வென்றானா மாமன்னன்… முழு திரை விமர்சனம் (?/5)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலிலும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.ஆரம்பத்தில் காமெடி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த உதயநிதி தற்போது சீரியசான கதைகளை தேர்ந்தெடு நடித்து வருகிறார்.அதன்படி தற்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்,மேலும் இப்படத்தினை இவரே தயாரித்தும் உள்ளார்.இது உதயநிதியின் கடைசி படம் ஆகும்,இப்படத்தில் வடிவேலு,பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தின் முழு விமர்சனத்தினை கீழே காணலாம்

மக்களின் மனதினை வென்றானா மாமன்னன்... முழு திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

காசிபுரம் என்ற ஊரின் எம் எல் ஏ ஆக இருக்கிறார் வடிவேலு,இவரின் மகன் தான் உதயநிதி இவர் அடிமுறை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வருகிறார்.இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் தனது தந்தை வடிவேலு உடன் 15வருடங்களாக பேசாமல் இருக்கிறார் உதயநிதி.வடிவேலு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவராக வருகிறார் பகத் பாசில்.படத்தில் பகத் பாசில் தனக்கு இணையானவர்களிடம் கூட தோற்றுவிடலாம் கீழே உள்ளவர்களிடம் தோற்றுவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.அதன்படி தனக்கு கீழே உள்ள வடிவேலுவை அப்படிதான் நடத்துகிறார் பகத்.இந்நிலையில் உதயநிதியின் கல்லூரி தோழியாக வருகிறார் கீர்த்தி,இவர் சொந்தமாக இலவச கல்வி மையத்தினை நடத்தி வருகிறார்,அதனை பகத் பாசில் அண்ணன் சுந்தரம் நிறுத்த மிரட்டல் வரவே அதனை உதயநிதியின் அடிமுறை கற்றுக்கொடுக்கும் பயிற்சி பள்ளிக்கு மாற்றுகிறார்.இந்நிலையில் சுந்தரம் அதனை ஆட்களை வைத்து அடித்து நொறுக்குகிறார்,இதனால் கடுப்பாக்கிய உதயநிதி சுந்தரத்தின் கல்வி மையத்தினை அடித்து உடைக்கிறார்.இதன்பின் படத்தில் என்ன நடந்தது? பகத் பாசில் உதயநிதியை எவ்வாறு பழி வாங்கினார் ? அதனை வடிவேலு உடன் இணைந்து எப்படி உதயநிதி சமாளித்தார் என்பதே மீதி படத்தின் கதை ஆகும்

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

மக்களின் மனதினை வென்றானா மாமன்னன்... முழு திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

படத்தில் உண்மையான மாமன்னன் என்று சொன்னால் வடிவேலுவை தான் சொல்ல வேண்டும்.அந்தளவிற்கு மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார் வடிவேலு.வடிவேலுக்கு எந்த வகையிலும் குறை இல்லாமல் பகத் தனது நடிப்பினை காண்பித்துள்ளார்,இருவரும் அந்த காதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்துள்ளதை படத்தில் காண முடிகிறது.வடிவேலு பேசும் சீரியசான வசனங்கள் திரையரங்குகளில் ரசிகர்களிடம் கைதட்டல்களை பெறுகிறது.உதயநிதி இப்படத்தில் பெரும் மெனக்கெடல்களை எடுத்துள்ளதை அவரது நடிப்பு காண்பிக்கிறது,கீர்த்தி சுரேஷும் தனக்கான கதாபாத்திரத்தினை கட்சிதமாக செய்துள்ளார்.மேலும் படத்தில் நடித்த லால், அழகம் பெருமாள், கீதா கைலாசம் ரவீனா ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது சமூக நீதியை அழுத்தமாக இப்படத்தில் பேசியுள்ளதற்கு பாராட்டுக்கள்.படத்தின் மிகப்பெரிய குறை என்று கூறினால் அது படத்தின் தொய்வு தான்,அதனை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருந்தால் படம் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.படத்தில் மாரி செல்வராஜின் அரசியல் வசனங்கள்,தீண்டாமை ஒழிப்பு வசனங்கள் எல்லாம் அருமையாக உள்ளது.ஏஆர் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு மாபெரும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

மாமன்னன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment