அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் – துணிவு பட கதாநாயகி அதிரடி பேட்டி… ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர். இவர் நடிப்பிற்கென்றே பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் புகைப்படம் ஒன்று வெளியானாலே போதும் அதுதான் அவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாமே. அந்தளவுக்கு அஜித்தின் மேல் அவரது ரசிகர்களுக்கு பாசம். இவர் படம் வெளியாகும் நாள் தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாமே என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  எங்க வீட்டை இடிச்சிட்டாங்க... வீடியோ வெளியிட்ட விஜய் டிவி ஜாக்லின் 

அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் - துணிவு பட கதாநாயகி அதிரடி பேட்டி... ரசிகர்கள் அதிர்ச்சி 1

விளம்பரம்

தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மங்காத்தா போலவே அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வங்கியில் திருடும் கொள்ளையனாக வந்து மிரட்டி எடுத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. ட்ரைலரில் அஜித் மிரட்டி எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும், வில்லத்தனமான நடிப்பினை காட்டி பிரித்தெடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அடி கட்டழகி கருவாச்சி... உன் மேல காதல் வந்து உருவாச்சி... ஜிவி பிரகாஷின் கள்வன் படத்தின் 1st single இதோ

அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் - துணிவு பட கதாநாயகி அதிரடி பேட்டி... ரசிகர்கள் அதிர்ச்சி 2

விளம்பரம்

இப்படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேட்டியில் பேசிய மஞ்சு வாரியார் கூறியதாவது,துணிவு படத்திற்கு பெரிய விளம்பரங்கள் ஏதும் பண்ணவில்லை,பெரிய விளம்பரங்கள் படத்தின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்து விடுகிறது.இதனால் மிகப்பெரிய கற்பனையுடன் ரசிகர்கள் திரையரங்குகள் வருகின்றனர்.எனவே அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என்பதற்காக படத்திற்கு ப்ரோமோஷன் செய்யப்படவில்லை,எதிர்பார்ப்பு இல்லாமல் துணிவு படத்திற்கு வந்தால் 100 சதவீத திருப்தியை அளிக்கும் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment