MARVEL படத்தில் ஒலித்த சூப்பர் ஸ்டார் பாட்டு

மார்வல் படம் என்றாலே தனி மவுசு தான்.அவெஞ்சர்ஸ் படத்தில் எகிறிய வரவேற்பு தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.பல சூப்பர் ஹீரோக்களை மார்வல் அறிமுகப்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.ஸ்பைடர் மென்,அயர்ன் மேன், தார் என பல குழந்தைகளின் விருப்பமான கதாபாத்திரங்களை உருவாக்கி படங்களை தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.இந்த நிறுவனத்தின் படம் வந்தாலே அனைவரும் உற்சாகம் ஆகிவிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரங்கள் மக்களுடன் ஒன்றிவிட்டது என்று கூறினால் மிகையாகாது. அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படம் உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்தது மார்வெல் நிறுவனத்தினை அடுத்த கட்டத்துக்கு தூக்கி சென்றது

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

MARVEL படத்தில் ஒலித்த சூப்பர் ஸ்டார் பாட்டு 1

விளம்பரம்

அண்மையில் வெளியாகிய மார்வல் ஸ்பைடர் மேன் படம் மற்றும் டாகடர் ஸ்ட்ரெஞ்சு போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.அதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட அப்டேட்டுகளை வெளியிட்டு மார்வல் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறது.திரையரங்கில் வெளியாவதை தொடர்ந்து சில சூப்பர் ஹீரோ கதைகளை வெப் தொடர்களாகவும் இயக்கி வெளியிட்டு வருகின்றனர்.இது நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.அதன்படி தற்போது புதியதாக மிஸ் மார்வல் என்ற வெப் சீரிஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.வாரம் ஒரு எபிசோட் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை கேபி

MARVEL படத்தில் ஒலித்த சூப்பர் ஸ்டார் பாட்டு 2

விளம்பரம்

அதன்படி இந்த வெப் சீரிஸின் முதல் எபிசோடில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய லிங்கா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ நண்பா என்ற பாடல் இந்த வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ளது.இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.தலைவர் பாடல் ஆங்கில படத்தில் அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் உயரம் சென்றுள்ளார் என நெகிழ்ந்துள்ளனர்.தற்போது இந்த விஷயம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மிஸ் மார்வெல் வெப் சீரிஸில் இமான் வெல்லானி மிஸ் மார்வெல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதனை இயக்குனர் பிஷா.கே அலி என்பவர் இயக்கியுள்ளார்.இந்த முதல் எபிசோடே மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment