தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.
ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.
மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை தங்கள் அண்ணன் ஆகவும் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.
ஆரம்பத்தில் .ஜோடி சீசன் நிகழ்ச்சிகளை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் பொழுது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பல உள்ளனர்.சிவகார்த்திகேயனின் இந்த திறமையை தெரிந்துகொண்ட விஜய் டிவி அவருக்காகவே அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது
இப்படி படிப்படியாக உயர்ந்து தான் இன்று சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்க உள்ளார்.சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in