The Indian Times

நடிகர் கார்த்தி அரவிந்த் சாமி நடிக்கும் மெய்யழகன் படத்தின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisement

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்,

இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

இவர் அடுத்ததாக அரவிந்த் சாமி உடன் மெய்யழகன் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in