The Indian Times

மறைந்த கணவருடன் Honeymoon சென்ற புகைப்படங்களை வெளியிட்டு கலங்கிய சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக ப்ரியா

சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட ஆரம்பித்தவர் சுருதி சண்முக பிரியா. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னம்பிக்கையை மட்டும் மையமாக வைத்து வாய்ப்பு தேடினார்.

தேடிய வாய்ப்புகளுக்கு பயனாக பிரபல நாடக இயக்குனர் திருமுருகன் இயக்கும் புதிய நாடகத்தில் ஸ்ருதிக்கு வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

நாதஸ்வரம் நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் அடியெடுத்துவைத்தார் ஸ்ருதி சண்முக பிரியா.

அறிமுகமாகிய முதல் நாடகத்திலேயே தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.

இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாடகங்கள் நடிக்க தொடங்கினார்.அதன்படி வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய தொடர்களில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.

பிரெஞ்சு படிப்பு மேல் தனி கவனம் செலுத்தி படித்து வந்ததால் நாடகங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாடி பில்டர் ஆன அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் ஆகியது.

திருமணம் ஆகி ஒரே வருடத்தில் இவரது கணவர் தற்போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்,இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.தற்போது கணவருடன் தேனிலவு சென்ற புகைப்படங்களை வெளியிட்டு கலங்கி உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in