The Indian Times

Murungakkai Chips – Sneak Peek 02 | Shanthnu Bhagyaraj | Athulya Ravi | Dharan Kumar

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து இன்றுவரை உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் மற்றும் இயக்குனரான பாக்கியராஜ்!அவரது மகனான நடிகர் சாந்தனு அவர்களையும் நாம் நன்கு அறிந்திருப்போம்! இந்நிலையில் இவர் கடைசியாக நடித்து திரையில் வெளியான படம் தான் மாஸ்டர்! நடிகர் விஜய் அவர்களின் படத்தில் அராத்து செய்யும் மாணவனாக வலம் வந்த இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது!

Advertisement

பார்கவ் என்னும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த இவர் ஹீரோவாக நடித்து திரைக்கு வெளியாகவுள்ள படம் தான் “முருங்கைக்காய் சிப்ஸ்”. இந்த படத்தில் சாந்து பாக்யராஜ் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் நகைச்சுவையாக கூறப்படும் முருங்கக்காய் சிப்ஸ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஷ்காந்த், மயில்சாமி, மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பிரபல தமிழ் நடிகர்களின் படைப்பிரிவையும் கொண்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் உள்ள ஒரு பிரத்யேக காட்சி வெளியாகியுள்ளது!

Advertisement

முதலிரவு நடைபெறும் இடத்தில் சாந்தனு மற்றும் அதுல்யா இரட்டை பொருள் கொண்ட வசனங்களை பேசியவாறு அந்த வீடியோவில் உள்ளது! இதனால் குடும்ப கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த அத்துல்யாவா என ஆச்சர்யத்தில் உறைந்த வண்ணம் உள்ளனர்! அந்த பிரத்யேக காட்சியை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in