The Indian Times

Vendhu Thanindhathu Kaadu -Official Teaser | Silambarasan TR | Gautham Vasudev Menon

தமிழ் சினிமாவில் சிறு வயதிலேயே நடிக்க வந்து தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் சிம்பு என்கிற சிலம்பரசன்! இவரது தந்தை இயக்குனர் T ராஜேந்திரன் அவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே! திரைத்துறையில் TR அவர்கள் எப்படி இசை, இயக்கம், நடிப்பு, பாடல் என கலக்கினாரோ அதே போலவே இவரும் சினிமா, பாடல் என கலக்கி வருகிறார்! விரைவில் படம் இயக்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்! நடுவில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு மன அழுத்தத்தில் மூழ்கிய நடிகர் சிம்புவை ரசிகர்கள் தேடி வந்தனர் என்று கூட சொல்லலாம்! இந்நிலையில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் சில வருடங்களுக்கு முன்பு வலம் வந்த சிம்புவை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியவே முடியாது என்றும் சொல்லலாம்! அப்படி இருக்கையில் இவர் இப்பொழுது முழுவதுமாக உடல் எடை குறைத்து படங்கள் நடிக்க ஆரம்பித்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்!

Advertisement

அப்படி இவர் மனம் மாறியதன் முதல் படியே இவருக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று கூட சொல்லலாம்! மாநாடு திரைப்படம் மூலம் 10 வருடங்களுக்கு பிறகு சிம்பு படம் அசுர வெற்றியை பெற்றது! இதனால் இவரது ரசிகர்கள் படு குஷியாக உள்ளனர்! அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கி படு பிசியாக உள்ள சிம்புவை பார்க்க பார்க்க ரசிகர்கள் உற்சாக கடலில் நீந்தி வருகின்றனர்! இந்நிலையில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் AR ரஹ்மான் இசையில் இவர் நடித்து வரும் படம் தான் வெந்து தணிந்தது காடு! இந்த திரைப்படம் சிம்புவுக்கு மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது!

Advertisement

இந்த படத்திற்காக மேலும் உடல் எடை குறைந்து அடையாளம் தெரியாமல் உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே! இந்நிலையில் இந்த படத்தில் இரு வேடத்தில் நடிப்பதாக சில செய்திகளும் வந்துள்ளது! அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே அது பற்றி நமக்கு தெரியவரும்! இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தில் முத்துவின் பயண வீடியோ வெளியாகியுள்ளது! இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in