செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “நானே வருவேன்” First Look போஸ்டர் வெளியானது | Dhanush

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் இளைய மகன் நடிகர் தனுஷ். இவர் சிறு வயதிலேயே திரைப்படத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்த போதிலும் தற்போது பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். இவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா அவர்களை மணம் முடித்தார். தன்னைவிட வயதில் மூத்தவர் என்ற போதிலும் பல எதிர்ப்புகளுக்கும், சச்சரவுகளுக்கும் நடுவில் அவர் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "நானே வருவேன்" First Look போஸ்டர் வெளியானது | Dhanush 1

விளம்பரம்

நடிகர் தனுஷ் அவர்களின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சில காலமாக சந்தித்து வருகிறார். அவர் காதலித்து கரம்பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் நடுவில் ஏகப்பட்ட பிரச்சினைகள். இருவரும் மனக்கசப்பால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரு குடும்பமும் சமாதானம் பேசியும் பலனில்லை என்று தெரிகிறது. இதனால் இருவரும் தங்களது வேலைகளை பார்க்க சென்றுவிட்டனர். தனுஷ் செல்வராகவன் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ஆல்பம் சாங் தயாரித்து வெளியிட்டார். அந்த பாடல் வெற்றி பெற தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் என தனுஷ் வாழ்த்தியிருந்தார். Twitter Original Source From: Selvaraghavan

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "நானே வருவேன்" First Look போஸ்டர் வெளியானது | Dhanush 2

விளம்பரம்

தற்போது தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் அவர்கள் தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் first லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மீசை தாடி இல்லாமல் சிறு வயது போல் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு தம் அடிப்பது போன்று வெளியாகியுள்ளது. இதை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. check the below tweet..

https://twitter.com/selvaraghavan/status/1507335649505910786

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment