RE-ENTRY கொடுத்த நான் அவன் இல்லை ஜீவன்…பாம்பாட்டம் படத்தின் TRAILER இதோ….

நான் அவன் இல்லை என்ற படத்தின் மூலம் மிக பிரபலம் ஆகியவர் நடிகர் ஜீவன்.இன்றுவரை இவர் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.2002 ஆம் ஆண்டு யூனிவர்சிட்டி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் இவர்,இப்படத்தினை தொடர்ந்து காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பினார்.இப்படம் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்த்தினை வழங்கியது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலித்தவரை கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்ட ரோஜா சீரியல் நாயகி

RE-ENTRY கொடுத்த நான் அவன் இல்லை ஜீவன்...பாம்பாட்டம் படத்தின் TRAILER இதோ.... 1

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் நடித்த திருட்டுப்பயலே படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.இந்த படத்தினை தொடர்ந்து 5 படங்களில் நடித்தார் ஜீவன்.இறுதியாக இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் சரியாக ஓடாததால் பட வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கியது.தற்போது வரை இவருக்கு ரசிகர்கள் இருக்க காரணம் என்னவென்றால் இவர் நடிப்பில் மிரட்டிய நான் அவன் இல்லை படம் தான் காரணம். இப்படத்திற்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தில் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்த சூரி ... விடுதலை மேக்கிங் வீடியோ இதோ !!

RE-ENTRY கொடுத்த நான் அவன் இல்லை ஜீவன்...பாம்பாட்டம் படத்தின் TRAILER இதோ.... 2

இந்நிலையில் பல ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் இருந்த ஜீவன் தற்போது பாம்பாட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரிஷ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா ஷரவத் நடித்துள்ளார்.மேலும் இவருடன் சுமன்,யாஷிகா ஆனந்த் ,சரவணன்,கூல் சுரேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மீண்டும் சினிமாவுக்கு வந்த ஜீவனுக்கு ரசிகர்கள் பாராட்டுக்களையும் படம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பத்து தல படத்தினை காண வந்து ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கி மூச்சுவிடவே கஷ்டப்பட்ட COOL SURESH

Embed video credits : MRT MUSIC

Leave a Comment