தங்களது நகைச்சுவை மூலம் மக்களுக்கு சிரிப்பையும் மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துபவர்கள் கோபி மற்றும் சுதாகர்,ஆரம்பத்தில் பல தடைகளுக்கு பிறகு தங்களது திறமையை நிரூபிக்க மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் அறிமுகமாகி கலக்கியவர் இவர்கள்.
தற்போது இங்கிருந்து வெளியேறி பரிதாபங்கள் என புதியதாக சேனல் தொடங்கி அதிலும் வெற்றிகண்ட உள்ளனர் இவர்கள்.தற்போது இவர்கள் சொந்த தயாரிப்பில் புதிய படமும் நடித்து வருகின்றனர்,இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
இவர்களுடன் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பயணித்து வருபவர் தான் டிராவிட் செல்வம்,சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்தாலும் இதுவரை இவர் பெரிதாக அடையாளம் காணப்படவில்லை.இருப்பினும் தனது விடா முயற்சியினை கைவிடாமல் நடித்து வருகிறார்.
தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார் டிராவிட் செல்வம்.தற்போது பரிதாபங்கள் சேனலில் கோபி மற்றும் சுதாகருக்கு அடுத்து கலக்கி வருபவர் இவர் தான்.
தற்போது டிராவிட் செல்வத்திற்கு திருமணம் நடைபெற்றுள்ளது,இவரின் திருமணத்திற்கு கோபி மற்றும் சுதாகர் இருவரும் குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in