சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலயும் வெற்றிபெற்றனர்,இறுதியாக அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
தற்போது இவர் நள்ளிரவில் பசிக்கிறது என கூறியதால் பாவனியை காரில் அழைத்து சென்று அவருக்கு ஹோட்டலில் உணவு வாங்கிக்கொடுத்துள்ளார்.தனக்காக தூக்கத்தை தொலைத்து ஹோட்டலில் நிற்கும் அமீரை புகைப்படம் எடுத்து இதுதான் என்னுடையவன் என நெகிழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவும் வெளியிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.காதலித்தால் இவர்களை போல காதலிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.